வழி மாறி சென்ற அஜித்
ADDED : 1714 days ago
பைக், கார் ரேஸ், போட்டோகிராபி, ஆளில்லா சிறிய ரக விமானம் தயாரித்தல் ஆகியவற்றில் ஆர்வமிக்க நடிகர் அஜித், சென்னை ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் வேப்பரியில் உள்ள புதிய கமிஷனர் அலுவலகத்திற்கு நேற்று திடீரென வந்தார் அஜித். இதனால் அங்கு பரபரப்பானது. போலீசார் அவரிடம் விஷாரித்ததில் எழும்பூரில் உள்ள பழைய கமிஷனர் அலுவலகத்தில் இயங்கி வரும் ரைபிள் கிளப்பிற்கு செல்வதற்கு பதிலாக இங்கு மாறி வந்தது தெரியவந்தது. வாடகை காரில் அஜித் வந்ததால் கார் ஓட்டுனர் இங்கு மாறி அவரை அழைத்து வந்துள்ளார். முன்னதாக அங்கிருந்த போலீசார் உட்பட பலரும் அஜித்துடன் செல்பி எடுத்தனர்.