வாய்மையே வெல்லும் - விஷால்
ADDED : 1715 days ago
ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நடித்து, தயாரித்துள்ள சக்ரா படம் நாளை(பிப்., 19) வெளியாகும் நிலையில் இப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை ஐகோர்ட் நீக்கியது.
இதுகுறித்து, ''எப்போதும் போல தடைகள், பிரச்சினைகளை சந்தித்தேன். எனக்கும், என் தொழிலுக்கும், சினிமா உள்ளிட்ட எல்லாவற்றுக்கும் உண்மையுடன் இருந்திருக்கிறேன். தயாரிப்பாளர் மட்டுமல்லாது இப்படம் தொடர்புடைய எல்லோரின் நலனையும் மனதில் வைத்து தடையை நீக்கிய கோர்ட்டிற்கு நன்றி. திட்டமிட்டப்படி படத்தை வெளியிடுகிறோம். வாய்மையே என்றும் வெல்லும் என விஷால் தனது மகிழ்ச்சியை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.