கலைமாமணி விருது : அம்மாவிற்கு சமர்ப்பணம் செய்த சிவகார்த்திகேயன்
ADDED : 1689 days ago
2019-2020ஆம் ஆண்டிற்கான கலைமாமணி விருது வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விருதுகளை வழங்கினார். 130 கலைஞர்களுக்கு வழங்கப்பட்ட இந்த விருது நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் வழங்கப்பட்டது.
இதையடுத்து சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில், சாமானியனையும் சாதனையாளனாய் மாற்றும் தமிழக மக்களுக்கும், இந்த விருதளித்து ஊக்கப்படுத்திய தமிழக அரசுக்கும் மிக்க நன்றி. தந்தையை இழந்து நிற்கதியாய் நின்ற எங்களை இழுத்து பிடித்து கரைசேர்த்த என் தாய்க்கு இந்த கலைமாமணி சமர்ப்பணம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், முதல்வரிடம் கலைமாமணி விருதும் பெறும் புகைப்படம் மற்று அந்த விருதினை தனது தாயிடம் கொடுத்து அவரது காலில் விழுந்து ஆசீர்வாதம் பெறும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.