உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினி, விஜய் படம் : கவுதம் மேனன் ஆசை

ரஜினி, விஜய் படம் : கவுதம் மேனன் ஆசை

விஜய்யை வைத்து யோஹான் அத்தியாயம் ஒன்று என்றொரு படத்தை இயக்க தயாரானவர் தான் கவுதம் மேனன். படத்தின் பர்ஸ்ட் லுக் எல்லாம் வெளியிடப்பட்ட நிலையில் அந்தப்படம் நின்று போனது.

இந்தநிலையில் தற்போது தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், விஜய்யை வைத்து ஒரு மியூசிக்கல் லவ் ஸ்டோரியை இயக்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. அதனால் அந்த கதைக்கான ஸ்கிரிப்ட்டை எழுதி முடித்துள்ளேன். விஜய்யிடம் கதையை சொன்னால் அவர் நடிப்பார் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அதேபோல், ரஜினிக்காகவே துருவ நட்சத்திரம் கதையை உருவாக்கினேன். ஆனால் அது நடக்கவில்லை. அதன்பிறகுதான் அந்த கதையில் விக்ரமை நடிக்க வைத்தேன். இருப்பினும் அடுத்தபடியாக ஒரு எமோசனல் கதையுடன் அவரையும் சந்திப்பேன் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் கவுதம் மேனன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !