உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பெங்களூரு திரைப்பட விழா: மார்ச் 24 தேதி தொடங்குகிறது

பெங்களூரு திரைப்பட விழா: மார்ச் 24 தேதி தொடங்குகிறது

சென்னை சர்வதேச திரைப்பட விழா தற்போது நடந்து வருகிறது. இதேபோன்று ஆண்டு தோறும் பெங்களூருவிலும் சர்வதேச திரைப்பட விழா நடக்கும். அதன்படி 13வது பெங்களூரு சர்வதே திரைப்பட விழா கடந்த மாதமே நடந்திருக்க வேண்டியது. கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு வருகிற மார்ச் மாதம் 24ம் தேதி தொடங்கி 31ந் தேதி வரை நடக்கிறது.

இதில் சுமார் 40 நாடுகளை சேர்ந்த 90 படங்கள் வரை திரையிடப்படுகிறது. இதுதவிர இந்த ஆண்டு சத்யஜித் ரேவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள் சிறப்பு பிரிவில் திரையிடப்படுகிறது. கர்நாடக சலனசித்ர அகாடமி சார்பில் திரைப்படங்கள் குறித்த கருத்தரங்கம் நடக்கிறது. 11 மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் இந்த பட விழாவுக்காக பயன்படுத்தப்பட இருக்கிறது.

இதற்கான லோகோ அறிமுக விழா நடந்தது. கர்நாடக மாநில முதல்வர் எடியூரப்பா சர்வதேச பட விழாவுக்கான லோகோவை வெளியிட்டார். இதில் நடிகர், நடிகைகள், கர்நாடகா பிலிம் சேம்பர், தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !