உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிறந்தநாளில் நானி கொடுக்கும் டபுள் டிரீட்!

பிறந்தநாளில் நானி கொடுக்கும் டபுள் டிரீட்!

தற்போது தெலுங்கில், டக் ஜெகதீஷ், ஷியாம் சிங்க ராய் என்ற இரண்டு படங்களில் நடித்து வருகிறார் நானி. இதில் டாக்ஸிவாலா தெலுங்கு படத்தை இயக்கிய ராகுல் சங்கிருத்தியன் இயக்கி வரும் ஷியாம் சிங்க ராய் படத்தில் இரண்டு வேடங்களில் நடிக்கிறார் நானி. இதுவரை அவர் நடித்த படங்களில் அதிக பட்ஜெட்டில் இப்படம் தயாராகி வருகிறது.

அதோடு, சிவா நிர்வானா இயக்கத்தில் நடித்துள்ள டக் ஜெகதீஷ் என்ற படம் ஏப்ரல் 23-ல் திரைக்கு வருகிறது. பிப்ரவரி 24ல் தனது 37ஆவது பிறந்த நாள் என்பதால், அன்றைய தினம் டக் ஜெகதீஷ் படத்தின் டீசர் மற்றும் ஷ்யாம் சிங்கராய் படத்தின் முதல் தோற்றத்தை ரசிகர்களுக்கு தனது பிறந்தநாள் ட்ரீட்டாக வெளியிடுகிறார் நானி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !