லிங்குசாமி புதிய படத்தின் பட்ஜெட், அதிர்ச்சியில் டோலிவுட்
ADDED : 1686 days ago
தமிழ் இயக்குனர் லிங்குசாமி, தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இணையும் புதிய படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்தப் படத்தின் பட்ஜெட் சுமார் 75 கோடியாம். ராம் இதுவரை நடித்த படங்களைக் காட்டிலும் இந்தப் படத்தின் பட்ஜெட் அதிகம் என்பதால் டோலிவுட் வட்டாரங்களில் அதிர்ச்சியடைந்துள்ளார்களாம்.
ராம் நடித்து கடைசியாக வெளிவந்த 'ஐ ஸ்மார்ட் சங்கர், ரெட்' ஆகிய படங்கள் வெற்றிப் படங்களாக இருந்தாலும் அவருடைய அதிகபட்ச வசூல் 60 கோடி தானாம். அப்படியிருக்க படத்தின் பட்ஜெட்டே 75 கோடி என்றால் வசூல் அதற்கு மேல் வர வேண்டும். மேலும், ராம் பற்றி தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அதிகம் தெரியாது. அவருக்கு இந்தப் படம் தமிழில் அறிமுகப்படம்தான். எனவே, இவ்வளவு பட்ஜெட் என்பது ரிஸ்க் என்கிறார்கள் டோலிவுட்டில்.
ஆனால், படத்தின் கதை மிரட்டலாக உள்ளது. அதற்கு அவ்வளவு பட்ஜெட் தேவைப்படுகிறது என்கிறதாம் படக்குழு. மேலும் இப்படத்தின் கதையைக் கேட்ட 'உப்பெனா' நாயகி உடனடியாக நடிக்க சம்மதம் சொல்லிவிட்டதாகவும் ஒரு தகவல்.
தமிழில் அடுத்தடுத்து 'அஞ்சான், சண்டக்கோழி 2' என தோல்விகளைக் கொடுத்த லிங்குசாமிக்கு இந்தப் படம் திருப்புமுனையாக இருக்கும் எனவும் படக்குழு நம்புகிறதாம்.