சித்தி 2: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த வரலட்சுமி
ADDED : 1801 days ago
சித்தி 2 சீரியலில் இருந்து ராதிகா விலகியிருப்பதால், அடுத்து அந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது. ராதிகா நடித்த கதாபாத்திரத்தில் மீனா அல்லது ரம்யாகிருஷ்ணனை நடிக்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் உலா வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, நடிகை வரலட்சுமி சித்தி 2 சீரியலில் ராதிகா கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக திடீரென ஒரு செய்தி வைரலானது. நிஜத்தில் வரலட்சுமிக்கு ராதிகா சித்தி. அதனால் வரலட்சுமி சித்தி 2வில் நடிக்க இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது.
ஆனால் இந்தத் தகவலை வரலட்சுமி மறுத்துள்ளார். 'இது உண்மையல்ல.. வதந்தி' என தன் சமூகவலைதளப் பக்கம் மூலம் தெளிவு படுத்தி இருக்கிறார் வரலட்சுமி.