டைட்டில் இல்லாமலேயே படப்பிப்பு முடிந்த அருண் விஜய் படம்
ADDED : 1731 days ago
அருண் விஜய் , அறிவழகன் கூட்டணியில் வெளிவந்த மெடிக்கல் திரில்லரான குற்றம் 23 படத்திற்கு பிறகு இருவரும் மீண்டும் இணைந்திருக்கிறார்கள். இது அருண் விஜய்யின் 31வது படம். படப்பிடிப்பு பணிகள் முழுமையாக முடிந்த நிலையில், டப்பிங் பணிகள் நேற்று பூஜையுடன் துவங்கப்பட்டது. படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.
ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் ராகவேந்திரா தயாரித்திருக்கும் இப்படம் உளவு சம்பந்தமான திரில்லர் படமாக உருவாகியுள்ளது. ரெஜினா கஸண்ட்ரா நாயகியாக நடிக்க, ஸ்டெஃபி படேல் மற்றும் பகவதி பெருமாள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார். பி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்த படம் தவிர அருண் விஜய் சினம், அக்னி சிறகுகள், சூர்யா தயாரிக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.