உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிகர் ஆகிறார் பிரபு சாலமன்

நடிகர் ஆகிறார் பிரபு சாலமன்

இயக்குனர்கள் நடிகர்களாவது சினிமா தொடங்கிய காலத்தில் இருந்தே இருக்கிறது. சமீபத்தில் கவுதம் மேனன், மோகன் ராஜா, சுசீந்திரன், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட சிலர் நடிகர் ஆனார்கள். தற்போது பிரபு சாலமனும் நடிகர் ஆகிறார்.



மாஸ்டர் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படம் அழகிய கண்ணே. இயக்குநர் சீனு ராமசாமியின் உதவியாளர் விஜயகுமார் இயக்குகிறார். பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன், லியோ சிவக்குமார் கதாநாயகனாக நடிக்கிறார் . கதாநாயகியாக சஞ்சிதா ஷெட்டி நடிக்கிறார்.


இந்தப் படத்தில் பிரபு சாலமன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் . படத்தின் இயக்குனர் விஜயகுமார் பிரபுசாலமனுக்கான கதாபாத்திரம் பற்றி அவரிடம் விளக்கி கூறிய பிறகு பிரபு சாலமனுக்கு கதையும் , கதாபாத்திரமும் மிகவும் பிடித்துப்போய் இந்த படத்தில் நடிகராக முதன் முதலாக நடிக்கிறார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !