உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹிந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் படம்

ஹிந்தியில் ரீமேக் ஆகும் விக்ரம் படம்

கடந்த 2016ஆம் ஆண்டில் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம்-நயன்தாரா-நித்யாமேனன் நடித்து வெளியான படம் இருமுகன்.இப்படத்தில் விக்ரம் இரண்டு வேடங்களில் மிரட்டலாக நடித்திருந்தார். இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் பணிகள் தொடங்கியிருப்பதாக ஒரு தகவல் வெளியாகி யுள்ளது.

தற்போது விஷால்-ஆர்யா நடிப்பில் எனிமி படத்தை இயக்கி வரும் ஆனந்த் ஷங்கரே இருமுகன் ஹிந்தி ரீமேக்கை இயக்கப்போகிறாரா? இல்லை வேறு யாரேனும் இயக்கப்போகிறார்களா? என்பது குறித்த தகவல் வெளியாக வில்லை. மேலும் இருமுகன் படம் இன்டர்நேசனல் ரவுடி என்ற பெயரில் டப் செய்யப்பட்டு ஹிந்தியில் வெளியாகினது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !