உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராம்சரணுக்கு ஜோடியாக தென் கொரிய நடிகை ?

ராம்சரணுக்கு ஜோடியாக தென் கொரிய நடிகை ?

கமலை வைத்து இந்தியன்-2 படத்தை ஆரம்பித்த இயக்குனர் ஷங்கர், தற்போது கமல் தேர்தல் பிரச்சாரம் மற்றும் கட்சிப்பணிகளில் ஈடுபட்டு வருவதால் அந்தப்படத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துள்ளார். இந்தநிலையில் தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படம் ஒன்றை ஷங்கர் இயக்கவுள்ளதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.


இந்தநிலையில் இந்தப்படத்தின் கதாநாயகியாக தென் கொரியாவை சேர்ந்த நடிகை பே சூஷி என்பவர் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்தப்படத்தை இந்திய அளவில் மட்டுமல்லாமல் ஆசியா அளவில் கொண்டுசெல்ல வேண்டும் என்பதற்காகத்தான் தென் கொரிய நடிகையை ஷங்கர் தேர்வு செய்ய இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !