விஜய் சேதுபதியை இயக்குனம் அந்தாதூன் இயக்குனர்
ADDED : 1731 days ago
தற்போது பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு வரும் அந்தாதூன் படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் அடுத்து மெர்ரி கிறிஸ்துமஸ் என்ற படத்தை இயக்க இருக்கிறார். இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான அந்தாதூன் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், 3 தேசிய விருதுகளையும் தட்டிச் சென்றது. இதனால் ஸ்ரீராம் ராகவனின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது.
தற்போது அவரின் அடுத்த படத்தில் விஜய்சேதுபதி நடிக்க இருப்பது இன்னும் அதிமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. விஜய் சேதுபதி ஜோடியாக கத்ரினா கைப் நடிக்கிறார். அமீர்கான் படத்தில் இருந்து விலகிய விஜய்சேதுபதி தற்போது மாநகரம் இந்தி ரீமேக்கில் நடித்து வருகிறார்.