உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்பைடர்மேன் 3: தலைப்பும், ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

ஸ்பைடர்மேன் 3: தலைப்பும், ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

ஸ்பைடர் மேன் படத்தின் முதல் 2 பாகங்கள் பெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து அதன் 3ம் பாகத்தை உலகம் முழுவதும் ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இரண்டாம் பாகத்தில் நடித்த டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப், மாரிஸா டோமி ஆகியோர் 3ம் பாகத்தில் நடிக்கிறார்கள்.

டாம் ஹாலண்ட், ஜிண்டாயா, ஜேகப் ஆகியோர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பைடர்மேன் போன் ஹோம், ஸ்பைடர்மேன் ஹோம் ரெக்கர், ஸ்பைடர்மேன் ஹோம் ஸ்லைஸ் ஆகிய 3 தலைப்புகளை பதிவிட்டிருந்தனர். இதனால் ரசிகர்களிடைய பெரும் குழப்பம் ஏற்பட்டது.

இந்த நிலையில் ஸ்பைடர்மேன் 3ம் பாகம் படத்துக்கு ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் என்ற தலைப்பு வைத்து இருப்பதாகவும், படம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் திரைக்கு வரும் என்றும் பட நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !