வாத்தி கம்மிங்- பாடலுக்கு குத்தாட்டம் போட்ட நஸ்ரியா
ADDED : 1683 days ago
மலையாள நடிகையான நஸ்ரியா, தமிழில் நேரம், ராஜா ராணி, நய்யாண்டி என சில படங்களில் நடித்தார். மலையாள நடிகர் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டு செட்டிலானவர், சமீபகாலமாக மலையாளம், தெலுங்கு படங்களில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்.
இந்நிலையில், விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ஒரு வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார் நஸ்ரியா. நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்ற அந்த வீடியோவை இதுவரை 6 லட்சம் பேருக்கு மேல் லைக் செய்துள்ளனர்.