உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா

நலன் குமாரசாமி இயக்கத்தில் ஆர்யா

சூது கவ்வும், காதலும் கடந்து போகும் படங்களை இயக்கியவர் நலன் குமாரசாமி. கடந்த 9 ஆண்டுகளில் இரண்டு படங்களை மட்டுமே இயக்கி உள்ளார். இரண்டிலும் நடிகர் விஜய் சேதுபதி தான் நாயகனாக நடித்தார். சமீபத்தில் வெளியான ஆந்தாலஜி படமான குட்டி ஸ்டோரியில் ஒரு குறும்படத்தை இயக்கி இருந்தார். இந்நிலையில் அடுத்தப்படியாக ஆர்யாவை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். பேண்டஸி கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதை ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !