மட்டி: மண் சாலை பந்தயத்தை மையப்படுத்திய படம்
ADDED : 1681 days ago
பிகே 7 கிரியேஷன்ஸ் சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரிக்கும் படம் மட்டி. டாக்டர் பிரகபல் என்பவர் இயக்கி உள்ளார். ஜே.ஜீ.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். யுவன், ரிதான் என்ற புதுமுகங்கள் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது.
படம் பற்றி இயக்குநர் பிரகபல் கூறியதாவது: மோட்டார் வாகன பந்தையத்தை வைத்து நிறைய படங்கள் வந்துள்ளது. மண் சாலையில் நடக்கும் பந்தயத்தை மையமாக வைத்து ஹாலிவுட்டில் பல படங்கள் வந்திருந்தாலும் இந்தியாவில் தயாராகி உள்ள முதல் படம் இது. 14 கேமராக்கள் வைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். தமிழ் சினிமா ரசிகர்களுக்கு புதிய அனுபத்தை கொடுக்கும் படமாக இருக்கும். என்றார்.