ஹீரோயின் ஆனார் பிரபுதேவா உதவியாளர்
பூதோபாஸ் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரித்துள்ள படம் தோப்புக்கரணம். கோகன் , அக்ஷய், சந்துரு, ரிசிகேஸ்வரன், நிரஞ்சன் உள்ளிட்ட புதுமுகங்கள் நடித்துள்ளனர். பிரபு தேவாவிடம் உதவியாளராக இருந்த தர்ஷிணி இந்த படத்தின் கதாநாயகியாக அறிமுகமாகிறார். வில்லனாக மிஸ்டர் இண்டியா டைட்டில் வென்ற ஸ்டீவ் நடித்திருக்கிறார். பரணி ஒளிப்பதிவு செய்கிறார், ஷரவன் இசை அமைக்கிறார்.
தயாரித்து இயக்குகிறார், பாஸ்கர் சீனுவாசன். படம் பற்றி அவர் கூறியதாவது: ஒரே ஏரியாவில் வசிக்கும் 5 நண்பர்களை அந்த ஏரியாவின் தாதா ஒரு பிரச்சனையில் பொதுமக்கள் மத்தியில் தோப்புக்கரணம் போட வைத்துவிடுகிறார். அதனால் அவமானம் அடைந்த அந்த நண்பர்கள் அந்த தாதாவை பழிவாங்க துடிக்கிறார்கள். இறுதியில் அவர்கள் தாதாவை என்ன செய்தார்கள் தோப்புக்கரணம் போட வைத்தார்களா இல்லை தாதா அவர்களை என்ன செய்தான் என்பதுதான் இந்த படத்தின் கதை. என்கிறார் இயக்குனர் பாஸ்கர் சீனுவாசன்.