சாண்டி படத்தில் கவுதம் மேனன்
ADDED : 1778 days ago
முன்னணி நடிகர்களின் படங்களில் நடன இயக்குனராக பணியாற்றிவர் சாண்டி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். தற்போது சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
பெம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவதா கிஷோர் தயாரிக்க, அறிமுக இயக்குனர் நம்பிக்கை சந்துரு இயக்கும் 3.33 படத்தில் சாண்டி கதாநாயகனாக நடிக்கிறார். திகிலூட்டும் ஹாரர் திரில்லராக உருவாகும் இப்படத்தில் இயக்குனர் கவுதம் மேனன் ஆமானுஷ்ய ஆய்வாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இதுகுறித்து இயக்குனர் நம்பிக்கை சந்த்ரு கூறியதாவது: இயக்குனர் கவுதம் மேனன் வரவு எங்கள் 3.33 படத்தின் தரத்தை மேலும் அதிகரித்துள்ளது. அவருடன் பணியாற்றியது மறக்கமுடியாத நிகழ்வு என்றார்.