அமிதாப்பிற்கு கண்ணில் ஆபரேஷன்
ADDED : 1727 days ago
ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சன் நேற்று முன்தினம் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதன் காரணம் உறுதிப்பட தெரியாமல் இருந்தது. பலரும் அவர் ஏற்கனவே பாதிக்கப்பட்டிருந்த கல்லீரல் தொடர்பான பிரச்னை என்றும், அதற்கான ஆபரேஷன் என்று கூறினர். இந்நிலையில் நேற்று கண்ணில் ஆபரேஷன் செய்துள்ளார்.
இதுப்பற்றி, ''இந்த வயதில் கண்ணில் ஆபரேஷன் என்பது சிக்கலானது. நடந்ததும், நடப்பவையும் நன்மைக்கே. கண்கள் மூடியிருப்பதால் எழுதவோ, படிக்கவோ முடியவில்லை. மறதியான நிலையில் உள்ளேன். இசை மட்டும் கேட்க முயல்கிறேன், அதிலும் திருப்தியில்லை'' என தெரிவித்துள்ளார் அமிதாப்.