உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த செல்லம்மா

100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த செல்லம்மா

தமிழ் சினிமாவின் பாடல்கள் உலக அளவில் கூட டிரண்டாகி வருகிறது. கொல வெறி, ரவுடி பேபி பாடல்கள் பெரிய சாதனை படைத்தது. சிவகார்த்திகேயன் மகள் பாடிய வாயாடி பெத்த புள்ள பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்தது.

தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டாக்டர் படத்தில் இடம் பெற்ற செல்லம்மா... பாடல் 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது. அனிருத் இசை அமைத்த இந்த பாடலை சிவகார்த்திகேயனே எழுதியிருந்தார். அனிருத் மற்றும், ஜோனிடா காந்தி இணைந்து பாடி இருந்தார்கள். கடந்த ஜூலை மாதம் யு டியூப்பில் வெளியிடப்பட்ட இந்த பாடல் 100 மில்லியின் பார்வையாளர்களை எட்டியுள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டரில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிவகார்த்தியேன். இந்த பாடலுக்கு ஆடி ரசிகர்கள் வெளியிட்டிருந்த வீடியோவை தொகுத்து வெளியிட்டு அனிருத் அடுத்த செஞ்சுரி அடித்து விட்டார் என்று குறிப்பிட்டிருக்கிறார் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !