உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'உப்பென்னா'வை பார்த்துவிட்டு பாராட்டிய அல்லு அர்ஜுன்

'உப்பென்னா'வை பார்த்துவிட்டு பாராட்டிய அல்லு அர்ஜுன்

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் திலுங்கில் வெளியான உப்பென்னா படம். மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஹீரோ வைஷ்ணவ் தேஜ், க்ரீத்தி ஷெட்டி, இயக்குனர் புஜ்ஜிபாபு ஆகியோர் புதுமுகங்கள் என்றாலும் வில்லனக விஜய்சேதுபதி நடித்திருந்தது படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்து விட்டது. இந்தப்படத்தை சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா ஆகிய திரையுலக பிரபலங்கள் பலரும் குடும்பத்துடன் பார்த்து பாராட்டியுள்ள நிலையில், தற்போது அல்லு அர்ஜுனும் இந்தப்படத்தை தனது குடும்பத்துடன் பார்த்து ரசித்துள்ளார். இந்தப்படம் வெளியான சமயத்தில் அல்லு அர்ஜுன் தனது குடும்பத்துடன் வெளிநாடு சென்றிருந்தார். திரும்பிவந்ததும் முதல் வேலையாக இந்த படத்தை பார்த்துள்ளார்..

ஹீரோ வைஷ்ணவ் தேஜ் தனது உறவினர் என்பதாலும் இந்தப்படத்தை தயாரித்திருப்பவர் பிரபல இயக்குனரான சுகுமார் என்பதால் அல்லு அர்ஜுன் இந்தப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்தார். அல்லு அர்ஜுனின் திரையுலக வாழக்கையில், மிகப்பெரிய வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் சுகுமார். அதுமட்டுமல்ல, அல்லு அர்ஜுன் படம் மூலம் தான் சுகுமார் இயக்குனராகவே அறிமுகமானார். மேலும் தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் புஷ்பா என்கிற படத்தையும் இயக்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது..


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !