பாலியல் தொழிலாளி தொடர்பான கதையில் அபிராமி
ADDED : 1684 days ago
பிக்பாஸ் மூலம் புகழ்பெற்றவர் அபிராமி வெங்கடாச்சலம், நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் கவனம் பெற்றார். தற்போது துருவ நட்சத்திரம் உள்பட சில படங்களில் நடித்து வருகிறார். வெப் சீரிஸ்களில் அதிகமாக நடிக்கிறார்.
இந்த நிலையில் லாஸ்ட் கஸ்டமர் என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படம் பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது உரிமை பற்றி பேசுகிறது. இதில் அபிராமியுடன், சந்தோஷ் பிரதாப், ஸ்வயம் சித்தா, நடிக்கிறார்கள். மேஜிக் டி.வி என்ற நிறுவனம் சார்பில் டேரி ஜோஸ், பானு வல்லூரி தயாரிக்கிறார்கள். ஷேக் நேபாஜி என்பவர் இயக்குகிறார். இதில் அபிராமி பாலியல் தொழிலாளியாக நடிப்பதாக கூறப்படுகிறது.