ஹாஸ்டல்-ல் அசோக் செல்வன் - பிரியா பவானி சங்கர்
ADDED : 1673 days ago
ரவீந்திரன் தயாரிப்பில் சுமந்த் ராதா கிருஷ்ணன் இயக்கத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் ஒரு படத்தில் நடித்து வந்தனர். பெயரிடப்படாத இப்படத்தில் நாசர், சதீஷ், கிரிஷ் குமார், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இப்படத்திற்கு 'ஹாஸ்டல்' என இப்போது பெயரிட்டுள்ளனர். போபோ சசி இசையமைக்க, பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.