'அந்தகன்' ஆரம்பம் : விலகிய பெட்ரிக் ; இயக்கத்தையும் ஏற்ற தியாகராஜன்
ADDED : 1722 days ago
ஹிந்தியில் தேசிய விருதை பெற்ற 'அந்தாதூன்' படம் தமிழில் பிரசாந்த் நடிக்க, அவரின் தந்தை தியாகராஜன் தயாரிக்க, 'அந்தகன்' என்ற பெயரில் ரீ-மேக் ஆகிறது. சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இதனிடையே இயக்குனர் ஜே.ஜே.பெட்ரிக் டுவிட்டர் மூலமும், அறிக்கை மூலம் வெளியிட்ட செய்தியில் ''அந்தகன் படத்தை நான் இயக்கவில்லை. அந்த படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள். விரைவில் எனது அடுத்தப்பட அறிவிப்பு வெளியாகும்'' என தெரிவித்துள்ளார்.