உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'சாரங்க தரியா' சர்ச்சையை முடித்து வைத்த சேகர் கம்முலா

'சாரங்க தரியா' சர்ச்சையை முடித்து வைத்த சேகர் கம்முலா

சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் படம் 'லவ் ஸ்டோரி'. இப்படத்தில் இடம் பெற்றுள்ள 'சாரங்க தரியா' என்ற பாடல் சமீபத்தில் யுடியூபில் வெளியிடப்பட்டு பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது 4 கோடி பார்வைகளை நெருங்கி வருகிறது.

அப்பாடலைப் பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நாட்டுப்புறப் பாடகி கோமலி என்பவர் அப்பாடல் தன்னுடைய பாட்டியிடமிருந்து தான் கற்றுக் கொண்ட பாடல். அப்பாடலை டிவியில் பாடி பிரபலமாக்கினேன். ஆனால், எனக்கான அங்கீகாரத்தைப் படக்குழுவினர் தரவில்லை,” எனக் குற்றம் சாட்டினார்.

அது குறித்து படத்தின் இயக்குனர் பேஸ்புக்கில் நீண்ட பதிவொன்றை பதிவிட்டுள்ளார். அதில் கோமலிக்கு உரிய அங்கீகாரமும், அவருக்கு நிதியும் அளிக்க உள்ளோம். மேலும், இசை வெளியீட்டின் போது இப்பாடலை அவர் மேடையில் பாடவும் கேட்டுக் கொண்டோம். அவரும் அதற்கு சம்மதித்துள்ளார்,” எனக் கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.

சேகர் கம்முலாவின் இந்த நியாயமான நடவடிக்கைக்கு ரசிகர்கள் பலரும் பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !