கனவு நிறைவேறியது - 'டிக்டாக்' இலக்கியா
ADDED : 1726 days ago
துரைராஜ் இயக்கத்தில் டிக் டாக் புகழ் இலக்கியா நடிப்பில் உருவாகியுள்ள படம் நீ சுடத்தான் வந்தியா. நாயகனாக அருண்குமார் நடித்துள்ளார். இலக்கியா கூறுகையில், ''சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு. அது நிறைவேறி இருக்கிறது. சினிமா எவ்வளவு சிரமம் என்பதை இப்போது புரிந்தது. இந்தப்படம் அடல்ட் படம். எனக்கு பிடித்தது நடித்தேன். டிக் டாக்கில் கவர்ச்சியாக வீடியோ பதிவிட்டதால் நல்ல ரீச் கிடைத்தது. அதனால் தொடர்ந்து அந்த மாதிரி பதிவுகளை போட்டேன். டிக்டாக் தான் எனக்கு சினிமா வாய்ப்பு தந்தது. என்னை பொறுத்தவரை மக்களிடம் நான் தெரிய வேண்டும். நல்ல படங்களில் நடிக்க வேண்டும். சினிமாவில் எந்த கேரக்டர் கொடுத்தாலும் நடிக்க தயார்'' என்கிறார்.