உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தமன்னா பற்றி பூஜா ஹெக்டே வெளியிட்ட ஆச்சர்ய தகவல்

தமன்னா பற்றி பூஜா ஹெக்டே வெளியிட்ட ஆச்சர்ய தகவல்

பொதுவாக முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவர் சக நடிகைகளை பற்றி ஏதாவது விஷயங்களை பகிர்ந்து கொள்வது அரிதான ஒன்றுதான். ஆனால் தற்போது முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துவரும் பூஜா ஹெக்டே, தனது சீனியர் நடிகையான தமன்னா பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் சிலாகித்து பேசியுள்ளார். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் பூஜாவை விட தமன்னா சினிமாவில் ஏழெட்டு வருடங்கள் சீனியர் என்றாலும் இருவரும் ஓரிரு வயது மட்டுமே வித்தியாசம் கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக தான் படித்த பள்ளியில் தமன்னா தனக்கு சீனியர் என்கிற தகவலையும் பூஜா ஹெக்டேவே கூறியுள்ளார்.

பள்ளிக்கால நினைவுகளை பகிர்ந்துகொள்ளும்போது, “நான் அப்போது அமைதியான சுபாவம் கொண்டவளாக, அதிகம் யாருடனும் நெருங்கி பழகாதவளாக இருந்தேன். ஆனால் தமன்னாவோ எனக்கு நேரெதிர்.. கலகலப்பாக அனைவருடனும் பேசுவார். ஆண்டுவிழா, கலைநிகழ்ச்சி, நடனம் போன்றவற்றில் முதல் ஆளாக கலந்துகொள்வார், சொல்லப்போனால் ஒரு லீடர் போலவே காட்சியளிப்பார்” என்று கூறியுள்ளார் பூஜா ஹெக்டே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !