உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் சன்னிலியோன்

மீண்டும் தமிழ் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் சன்னிலியோன்

ஆபாசப்பட நடிகையாக இருந்து தற்போது பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் சன்னி லியோன். இவர் கடந்த 2014ம் ஆண்டு ஜெய் நடித்த வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருந்தார். அதன்பின் தமிழில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்தார். படப்பிடிப்பு நடந்த நிலையில் கிடப்பில் தற்போது தடைப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மீண்டும் தமிழில் ஒரு படத்தில் நடனம் ஆட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பின் கார்த்திக் நாயகனாக நடிக்கும் தீ இவன் படத்தில் தான் சன்னி லியோன் ஆட இருக்கிறார். ஜெயமுருகன் இயக்கும் இப்படத்தில் சுகன்யா கார்த்திக்கிற்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்திற்காக மும்பையில் பிரமாண்ட செட் போடப்பட்டு படமாக்கப்படும் பாடல் காட்சி ஒன்றில், கார்த்திக்குடன் சன்னி லியோன் ஆட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !