உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சமஸ்கிருத படத்தில் நடிக்கும் அனுமோல்

சமஸ்கிருத படத்தில் நடிக்கும் அனுமோல்

தமிழில் வெளிவந்த ஒரு நாள் இரவில் என்ற படத்தில் பாலியல் தொழிலாளியாக நடித்தவர் அனுமோல். அதற்கு முன்பாக கண்ணுக்குள்ளே, சூரன், திலகர் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். மலையாளத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தமிழ், மலையாள படங்களில் நடித்து வந்த இவர், இப்போது வாக்கிங் ஓவர் வாட்டர் என்ற பெங்காலி படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சமஸ்கிருத மொழியில் தயாராகும் தயா என்ற படத்தில் நடிக்கிறார். இதில் அவருடன் தெஸ்பியன் நெடுமுடிவேனு, பாபு நம்பூதிரி, தினேஷ் பணிக்கர் உள்பட பலர் நடிக்கிறார்கள். சன்னி ஜோசப் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.பிரபா இயக்குகிறார். இது 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் கதை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !