வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராஜேஷ்
ADDED : 1681 days ago
அரை டஜன் படங்களுக்கு மேல் நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். கிரிக்கெட் விளையாட்டை மையப்படுத்தி உருவான கனா படத்தில் இவரது நடிப்பு பாராட்டப்பட்டதோடு அந்தப்படமும் வெற்றி பெற்றது. இந்நிலையில் தற்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற தடகள வீராங்கனை சாந்தி சவுந்தர்ராஜனின் வாழ்க்கை வரலாறு படத்தில் அவரது வேடத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கப்போவதாக செய்தி பரவி வருகிறது. ஆனால் அந்த செய்தி உண்மையல்ல என ஐஸ்வர்யா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.