விஷாலின் அடுத்த படம் என்ன?
ADDED : 1745 days ago
சக்ரா படத்தை அடுத்து ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ஆர்யா உடன் எனிமி படத்தில் நடித்து வருகிறார் விஷால். இதையடுத்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி, நடிக்கிறார். ஏற்கனவே இதன் படப்பிடிப்பு பாதி வளர்ந்து முடிந்துள்ளது. இதை முடித்ததும் 'எது தேவையோ அதுவே தர்மம்' என்ற குறும்படத்தை இயக்கிய சரவணன் இயக்கும் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். விஷாலே தயாரிக்கும் இப்படம் வித்தியாசமான கதைக்களத்தில் ஆக்ஷன் படமாக உருவாகிறது.