கவர்ச்சியில் கிறங்கடிக்கும் ராய் லட்சுமி
ADDED : 1663 days ago
சிண்ட்ரல்லா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். தமிழ் தவிர்த்து தெலுங்கு, கன்னட படங்களிலும் நடிக்கிறார். சோசியல் மீடியாவில் சுறுசுறுப்பாக இருக்கும் இவர் கிளாமர் போட்டோக்களை வெளியிட்டு இளசுகளை சூடேற்றி வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், மாலத்தீவு போன்ற வெளிநாடுகளுக்கு சென்றும் தனது பிகினி போட்டோக்களை வெளியிட்டு வந்த ராய் லட்சுமி, ஜிம்மில் தான் உடற்பயிற்சி செய்யும் போட்டோ வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ஒரு டவலை மட்டுமே வைத்து மொத்த உடம்பையும் போர்த்திக் கொண்டுள்ள ஒரு போட்டோவை வெளியிட்டு மீண்டும் ரசிகர்களை தெறிக்க விட்டுள்ளார். அந்த போட்டோவுக்கு ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி கொடுத்து வருகின்றனர்.