ஓடிடியில் வெளியானது மஸ்கிட்டோ பிளாசபி
ADDED : 1662 days ago
பல விருதுகளை வென்ற லென்ஸ் படத்தை இயக்கிய ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கி உள்ள படம் தி மஸ்கிட்டோ பிளாசபி. சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்ற படம். ஒரு லட்சம் ரூபாய் முதலீட்டில் 6 மணி நேரத்தில் தயாரிக்கப்பட்ட படம். இந்த படம் சினிமாபெரனர் என்ற ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
40 வயதுமிக்க ஆண், தன் தாயின் விருப்பத்திற்காக 25 வயதுடைய பெண்ணை மணக்கவிருக்கும் செய்தியினை தன் நண்பர்களுக்கு அறிவிக்கிறான். அவனை இச்சமூகம் எப்படி பார்க்கிறது? நண்பர்களுக்கு இடையே நிகழும் கேலி உரையாடலால் ஓர் உறவின் போக்கையே மாற்ற முடியுமா? வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இருவர் திருமணபந்தத்தில் இணைவதில் இருக்கும் உள்ளார்ந்த பிரச்சினைகள் என்ன? அப்பிரச்சனைகளை அவர்கள் எதிர்கொண்டு கடக்க இயலுமா? என்பதை பற்றி பேசுகிறது படம்.