'மாஸ்டர்' - 75வது நாளில் திரண்ட ரசிகர்கள்
ஒரு படம் ஓடிடி தளத்தில் வெளிவந்து சுமார் இரண்டு மாதங்கள் ஆன பின்னும் அந்தப் படத்தைத் தியேட்டரில் பார்க்க மக்கள் திரண்டு வருவது ஆச்சரியத்திலும் ஆச்சரியம்தான். அப்படி ஒரு ஆச்சரியத்தை திருநெல்வேலி ரசிகர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். திருநெல்வேலியில் உள்ள பிரபல தியேட்டர் ராம் முத்துராம் சினிமாஸ். விஜய், அஜித் நடித்த படங்களைத் தொடர்ந்து வெளியிடும் ஒரு தியேட்டர்.
அங்கு 'மாஸ்டர்' படம் திரையிடப்பட்டு தற்போது 75வது நாளைத் தொட்டுள்ளது. 25வது, 50வது நாள் கொண்டாட்டங்களைத் தொடர்ந்து இன்று 75வது நாள் கொண்டாட்டத்தைத் தியேட்டரில் விஜய் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்காக எண்ணற்ற ரசிகர்கள் தியேட்டருக்கு வந்து அச்சரியப்படுத்தி உள்ளார்கள்.
அதை அந்த தியேட்டர் நிர்வாகம் டுவிட்டரில் பகிர்ந்து விஜய் ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளது.'மாஸ்டர்' படம் இன்னும் சில ஊர்களில் சில தியேட்டர்களில் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது.