மேலும் செய்திகள்
ஜாவா சுந்தரேசன் ஆக மாறிய சாம்ஸ்
1653 days ago
மூக்குத்தி அம்மன்-2 பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியீடு
1653 days ago
தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்!
1653 days ago
மகாநடி படம் மூலம் தென்னிந்திய நடிகையாக மாறிவிட்ட கீர்த்தி சுரேஷ், தற்போது இந்திப்படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். அனைத்து மொழிகளிலும் கைவசம் படங்களை வைத்திருப்பதால் படப்பிடிப்பிற்காக பிசியாக கலந்து கொண்டு வருகிறார். இதனால் தற்போது தெலுங்கில் அவர் நடித்து, விரைவில் வெளியாக உள்ள 'ரங்தே' படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்துகொள்ள மாட்டார் என்றே சொல்லப்பட்டது..
அதனால் இந்தப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ள நிதின், கீர்த்தி சுரேஷ் புரமோஷன் நிகழ்சியில் கலந்து கொள்ள வேண்டும் என வித்தியாசமான பாணியில் வேண்டுகோள் விடுத்தார். கீர்த்தி சுரேஷின் பள்ளிக்கால போட்டோ ஒன்றை தனது கையில் வைத்தபடி சோஷியல் மீடியாவில் ஒரு புகைப்படத்தை வெளியிட்ட நிதின், “மிஸ்ஸிங்.. காணவில்லை. டியர் அனு.. ரங்தே புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டே ஆக வேண்டும் என்பது எங்களுடைய மேலான கோரிக்கை.. இப்படிக்கு உன்னுடைய அர்ஜுன்” என நகைச்சுவையாக குறிப்பிட்டிருந்தார். .
இதனையே அழைப்பாக ஏற்று கீர்த்தி சுரேஷும் தவறாமல் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.. இந்தப்படத்தில் அனுவாக கீர்த்தி சுரேஷும், அர்ஜுனாக நிதினும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
1653 days ago
1653 days ago
1653 days ago