குணமடைந்தார் கார்த்திக்: நாளை முதல் பிரச்சாரம்
ADDED : 1663 days ago
நடிகர் கார்த்திக் மனித உரிமை காக்கும் கட்சியை நடத்தி வருகிறார். இந்த கட்சி வருகிற சட்டசபை தேர்தலில் ஆளும் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. அந்த கட்சியை ஆதரித்து அவர் பிரச்சாரம் செய்ய இருந்த நிலையில் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது பூரண நலம் பெற்று வீட்டுக்கு திரும்பி உள்ள கார்த்திக் நாளை முதல் (மார்ச் 25) தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். சங்கரன்கோவில், ராஜபாளையம், போடிநாயக்கனூர், மதுரை, திருப்பரங்குன்றம், ராயபுரம் தொகுதிகளில் அவர் பிரச்சாரம் செய்கிறார்.