உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் வரும் பூஜா ஹெக்டே : மீண்டு வருவாரா ?

மீண்டும் வரும் பூஜா ஹெக்டே : மீண்டு வருவாரா ?

தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் பூஜா ஹெக்டே. அவர் கதாநாயகியாக அறிமுகமானது தமிழ்ப் படத்தில்தான் என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தப் படம் வந்த வேகத்தில் தியேட்டரை விட்டு ஒடியதே அதற்குக் காரணம்.

மிஷ்கின் இயக்கத்தில் 2012ம் ஆண்டு வெளிவந்த 'முகமூடி' படத்தில்தான் அவர் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் தெலுங்கு, ஹிந்தியில் அறிமுகமாகி அங்கு பிரபலமாகிவிட்டார்.

தமிழில் இத்தனை வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் விஜய்யின் 65வது படத்தில் நடிக்க வருகிறார். அது பற்றிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.

சுமார் 10 வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வரும் பூஜா ஹெக்டே தன் முதல் தோல்வியை மறந்து மீண்டு வருவாரா என்பதுதான் அடுத்த கேள்வியாக எழும். விஜய் படமாச்சே, எப்படியும் சுமாரான படமாக அமைந்தால் கூட ஓட வைத்துவிட மாட்டார்களா அவரது ரசிகர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !