உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 20 ஆண்டுகள் கழித்து 'மின்னலே' மீண்டும் ரிலீஸ் : மாதவன் மகிழ்ச்சி

20 ஆண்டுகள் கழித்து 'மின்னலே' மீண்டும் ரிலீஸ் : மாதவன் மகிழ்ச்சி

தியேட்டர்களில் பிலிம்கள் மூலம் திரைப்படங்கள் திரையிட்ட காலத்தில் பழைய படங்களை அடிக்கடி திரையிட்டு வந்தார்கள். ஆனால், பிலிம்கள் சகாப்தம் முடிந்து டிஜிட்டல் திரையீடு ஆரம்பித்த பின் பழைய படங்கள் மீண்டும் திரையிடப்படுவது நின்று போனது.

இந்த கொரோனா காலத்தில் புதிய படங்களுக்கு அதிக வரவேற்பு இல்லாத காரணத்தால் பழைய படங்களை டிஜிட்டல் மயமாக்கி மீண்டும் ரிலீஸ் செய்து வருகிறார்கள். சமீபத்தில் 'பில்லா, மன்மதன்' ஆகிய படங்கள் அப்படி ரிலீஸ் ஆகின.

அந்த வரிசையில் கவுதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்த முதல் படமான 'மின்னலே' படம் நேற்று சில தியேட்டர்களில் மீண்டும் வெளியானது. அது குறித்து மாலை படம் பார்க்கப் போவதாக ரசிகர் ஒருவர் டுவீட் செய்திருந்தார்.

அந்த ரசிகரிடம் “அந்தக் காட்சியின் ரியாக்ஷனை தயவு செய்து வீடியோவாக அனுப்புங்கள்,” என்று கேட்டிருந்தார். மேலும், “20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 'மின்னலே' வெளியாகி உள்ளது. இதைக் கேட்க அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது,” என்று டுவீட் செய்துள்ளார்.

ரசிகர்களின் மனதிற்குப் பிடித்த பழைய படங்களை மீண்டும் தியேட்டரில் பார்க்க வைக்கிறது இந்த கொரோனா. நடிகர் மாதவன் இப்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !