தனுஷ் ஹிந்தி படம் நிறைவு
ADDED : 1651 days ago
நடிகர் தனுஷ் ஹிந்தியில் நடித்துள்ள மூன்றாவது படம் ‛அத்ரங்கி ரே'. ஆனந்த் எல்.ராய் இயக்க, அக்ஷய் குமார், சாரா அலிகானும் நடித்துள்ளனர். ஏற்கனவே தனது பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டார் தனுஷ். இப்போது ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிட்டது.
இதுப்பற்றி, ‛‛இப்படத்தில் எனக்கு இந்த வாய்ப்பு அளித்த ஆன்ந்த் எல்.ராய்க்கு நன்றி. செட்டில் எப்போதும் நேர்மறையான எண்ணங்களை கொண்டு வந்த அக்ஷய் குமாருக்கு நன்றி. படப்பிடிப்பில் எப்போதும் ஊக்குவித்த தனுஷிற்கும் நன்றி. இந்த பயணத்தில் இவரை சிறந்த பார்டனர் கிடைக்காது. அதோடு நிறைய தென்னிந்திய உணவையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி'' என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சாரா அலிகான்.