ஆண்களுக்கு மட்டும் அப்படி நடக்காது - டாப்சி
ADDED : 1696 days ago
தென்னிந்திய சினிமாவை தாண்டி ஹிந்தியிலும் வெற்றி நாயகியாக வலம் வருகிறார் டாப்சி. பொதுவாக நடிகைகள் பிகினி போட்டோவை பகிர்ந்தால் அதுப்பற்றி விமர்சனங்கள் வரும். இதுதொடர்பாக ஏற்கனவே தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுத்திருந்தார் டாப்சி. இப்போது ஒரு பேட்டியில் பிகினி தொடர்பான கேள்விக்கு பதிலளித்த இவர், ‛‛நான் பார்த்தவரை பெண்கள் தங்களின் பிகினி படங்களை வெளியிடும் போது தான் அவர்கள் விமர்சிக்கப்படுகிறார்கள். இதே ஒரு ஆண் ஜிம்மிலோ, கடற்கரையிலோ சட்டையை கழற்றி காண்பித்தாலோ அல்லது அரை நிர்வாணமாக நின்றாலோ அவர்களுக்கு அது போன்று நடக்காது'' என தெரிவித்துள்ளார்.