ரூ.6 கோடி மதிப்பில் லம்போர்கினி கார் வாங்கிய பிரபாஸ்
ADDED : 1658 days ago
இந்திய அளவிலான ஹீரோவாக மாறிவிட்ட நடிகர் பிரபாஸ் தற்போது ஆதி புருஷ், சலார் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் ஒரு படத்திற்கு 80 முதல் 100 கோடி வரை சம்பவளம் வாங்குவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரூ. 6 கோடி மதிப்புள்ள லம்போர்கினி சொகுசு காரை வாங்கியிருக்கிறார். ஆரஞ்சு நிறத்தில் அவர் வாங்கியிருக்கும் அந்த காரின் போட்டோக்கள் சமூகவலைதளங்களில் வைலராகி உள்ளது. காரை பிரபாஸ் பார்ப்பது, அவர் சாலைகளில் அந்த காரில் பறப்பதுமான வீடியோக்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் இந்த ரக காரை வெகு சில திரைப்பிரபலங்கள் மட்டுமே வைத்துள்ளனர்.