வலிமை வில்லனின் வேண்டுகோள்
ADDED : 1652 days ago
வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் வில்லனாக நடித்திருப்பவர் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா. தெலுங்கில் ஆர்.எக்ஸ்.100 என்ற படத்தின் மூலம் புகழ் பெற்றவர். ஆனால் அதையடுத்து அவர் சில படங்கள் தோல்வியடைந்தன. இருப்பினும் கார்த்திகேயாவின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் கிடைத்தன. இதையடுத்து என் படங்கள் பிடிக்காதவர்கள் என்னை மன்னித்து விடுங்கள். அடுத்தபடியாக நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து மீண்டும் உங்கள் முன்பு தோன்றுவேன். எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என்று ரசிகர்களைப் பார்த்து கேட்டுக் கொண்டுள்ளார் கார்த்திகேயா.