த்ரில்லர் கதையில் சசிகுமார்
ADDED : 1698 days ago
தமிழில் அதிக படங்களில் நடிக்கும் ஹீரோக்களில் இயக்குனர் சசிகுமாரும் ஒருவர். ராஜவம்சம், எம்ஜிஆர் மகன், கொம்புவச்ச சிங்கம்டா உள்ளிட்ட அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அடுத்தப்படியாக கழுகு படத்தை சத்ய சிவா இயக்கும் ஒரு படத்தில் நாயகனாக நடிக்கிறார். சஸ்பென்ஸ் திரில்லர் வகையான கதையில் இப்படம் தயாராகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.