‛பபூன்' ஆக மாறிய வைபவ்
ADDED : 1653 days ago
‛ஜெமே தந்திரம்' படத்தை முடித்துவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்து விக்ரம், அவரது மகன் துருவ்வை வைத்து விக்ரமின் 60வது படத்தை இயக்கி வருகிறார். தனது ஸ்டோன் பென்ச் மூலம் பட தயாரிப்பிலும் ஈடுபட்டு வரும் கார்த்திக், இப்போது 5வது தயாரிப்பாக ‛பபூன்' என்ற படத்தை எடுக்கிறார். இதில் வைபவ் நாயகனாக நடிக்கிறார். அசோக் வீரப்பன் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இதில் நாடக கலைஞர் தோற்றத்தில் வைபவ் உள்ளார்.