மீண்டும் விஜய்க்கு வில்லனா - வித்யூத் ஜம்வால் டுவீட்
ADDED : 1650 days ago
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிக்கயிருக்கும் அவரது 65ஆவது படத்தில் முகமூடி படத்தில் நடித்த பூஜா ஹெக்டே நடிக்கயிருப்பது உறுதியாகியுள்ள நிலையில், கேஜிஎப் பட புகழ் சண்டை பயிற்சியாளர்கள் அன்பறிவ் என்ற இரட்டையரும் ஒப்பந்தமாகியுள்ளனர்.
இந்த நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படத்தில் வில்லனாக நடித்த வித்யூத் ஜம்வால் மீண்டும் விஜய் 65ஆவது படத்தில் வில்லனாக கமிட்டாகியிருப்பதாக ஒரு செய்தி சோசியல் மீடியாவில் வைரலாகி வந்தது.
அந்த செய்தியை வித்யூத் ஜம்வால் மறுத்து ஒரு டுவீட் வெளியிட்டுள்ளார். அதில், நான் காத்திருக்கிறேன். விஜய்யுடன் நடிக்க விரும்புகிறேன். ஆனபோதும் விஜய் 65ஆவது படத்தில் நான் நடிப்பதாக வெளியாகியிருப்பது தவறான செய்தி என்று பதிவிட்டுள்ளார்.