விஷாலின் 31வது படம் அறிவிப்பு
ADDED : 1650 days ago
எனிமி படத்தில் நடித்து வரும் விஷால், அடுத்தது துப்பறிவாளன் 2 படத்தை இயக்கி, நடித்து, தயாரிக்கிறார். இப்போது அவரின் 31வது படத்திற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதியவர் து.பா.சரவணன் இப்படத்தை இயக்குகிறார். இவர் சமீபத்தில் இயக்கிய “எது தேவையோ, அதுவே தர்மம்” குறும்படம் திரைத்துறையில் பரவலான பாராட்டுக்களை குவித்தது. இக்குறும்படத்தினால் ஈர்க்கபட்ட நடிகர் விஷால், தனது அடுத்த படத்தினை இயக்கும் வாய்ப்பை இயக்குநருக்கு தந்துள்ளார்.
விஷாலே நடித்து, தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை. மற்ற நடிகர்கள் தேர்வு நடக்கிறது. அதிகாரபலம் படைத்தவர்களை சாமானியன் ஒருவன் எதிர்கொள்ளும் கதை தான் இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக உருவாகிறது.