உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தனுஷின் கர்ணன் படத்திற்கு யு/ஏ சான்று

தனுஷின் கர்ணன் படத்திற்கு யு/ஏ சான்று

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், ரஜிஷா விஜயன், லால், யோகிபாபு நடித்துள்ள படம் கர்ணன். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டபோது 24 மணி நேரத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்தது. தனுஷ் குதிரையில் என்ட்ரி கொடுத்தது, டீசரில் இடம் பெற்றி சில காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வருகிற ஏப்ரல் 9-ந்தேதி கர்ணன் படம் திரைக்கு வரும் நிலையில், படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் யுஏ சான்றிதழ் அளித்துள்ளனர். இந்த தகவலை கர்ணன் படத்தின் தயாரிப்பாளரான எஸ்.தாணு, தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !