இசை பயிற்சியுடன் களமிறங்கும் ஏ.ஆர்.ரஹ்மான் பட ஹீரோ, ஹீரோயின்
ADDED : 1758 days ago
இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான், 99 சாங்ஸ் படத்தின் மூலம் தயாரிப்பாளர் மற்றும் கதாசிரியர் அவதாரமெடுத்துள்ளார். இசையுடன் கூடிய காதல் கதையான இப்படத்தில், எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் என்ற இளம் ஹீரோ, ஹீரோயினை அறிமுகப்படுத்துகிறார்.
இவர்கள் குறித்து ரஹ்மான் கூறியிருப்பதாவது: திறமை மிகுந்த எஹான் பட் மற்றும் எடில்சி வர்காஸ் ஆகியோரை அறிமுகப்படுத்துவதற்கு நான் மகிழ்ச்சி அடைகிறேன். மிகவும் திறமையோடும், ஆர்வத்தோடும் அவர்கள் திகழ்கின்றனர். அவர்களின் திரையுலகப் பயணம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
எஹான் பட் படத்தில் இசை கலைஞராக நடிப்பதால் அவருக்கு முறைப்படி எனது ஸ்டூடியோவில் ஒரு வருடம் இசை பயிற்சி கொடுத்து அதன்பின்பு தான் நடிக்க வைத்தேன். எடில்சி வர்காஸ் முறையான இசை பயிற்சி பெற்றவர். இருவருக்குமே இந்திய சினிமாவில் நல்ல எதிர்காலம் இருக்கிறது. என்கிறார்.