ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடும் ராஷ்மிகா, கல்யாணி
ADDED : 1645 days ago
பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று தான். அதுவும் இந்த சமூக வலைத்தள காலங்களில் நம் நண்பர்களும், உறவினர்களும் நமக்கு வாழ்த்து மழைகளை அள்ளித் தெளித்துவிடுவார்கள். நம்மை விடவும் சினிமா பிரபலங்களுக்கு அந்த வாழ்த்து மழை பெரு மழையாகவே அமையும்.
தமிழுக்குப் புதிதாக வந்துள்ள ராஷ்மிகா, முன்னேறத் துடித்துக் கொண்டிருக்கும் கல்யாணி பிரியதர்ஷன் ஆகியர் இன்று ஒரே நாளில் பிறந்தநாள் கொண்டாடு ஆச்சரிய ஒற்றுமை.
அவர்களுக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக கல்யாணிக்கு கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ள வாழ்த்து ஸ்பெஷலாக அமைந்துள்ளது. சிறு வயதிலிருந்தே இருவரது குடும்பமும் நெருக்கமான குடும்பம் என்பது அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் இருந்து தெரிகிறது.
இருவரது பெற்றோர்களும் திரைத்துறையில் இருப்பவர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். கல்யாணியுடன் சிறு வயதில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களைப் பகிர்ந்து இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அம்மு என வாழ்த்தியுள்ளார்.